Monday, May 26, 2008

437. கன்னட வெறியர் மற்றும் நடிகர்கள் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தோல்வி

தட்ஸ்டாமில்.காம் வலைத்தளத்தில் வந்துள்ள ஒரு செய்தியை கீழே தந்துள்ளேன்.  வா(மு)ட்டாள் நாகராஜ் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார்.  பல கன்னட நடிகர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.  இதிலிருந்து இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

1. பெரும்பாலான கன்னடர்கள் மற்றொரு (தமிழ்நாடு) மாநில மக்களுக்கு எதிரான வெறிச் செயல்களை தூண்டி விடுபவர்களை புறக்கணிக்கின்றனர். அவர்கள் அண்டை மாநிலத்தவருடன் சுமுகமான உறவையே விரும்புகின்றனர்.  தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வியாதிகள் தான் வெறுப்புக்கு தூபம் போட அலைகின்றனர் :(

2. தமிழ்நாட்டில் நிலவுவது போல, கர்நாடகத்தில் சினிமா மோகம் தலை விரித்து ஆடவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.  Rajkumar was an exception !

இனி செய்தியை வாசிக்கவும்.
************************

வாட்டாள் நாகராஜ் தோல்வி-டெபாசிட்டையும் இழந்தார்
திங்கள்கிழமை, மே 26, 2008
  
     
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ், டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.

கன்னட சளுவாளி இயக்கம் என்ற அமைப்பின் தலைவர்தான் வாட்டாள். இதுதவிர கர்நாடக எல்லைப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர் வாட்டாள். தமிழர்களுக்கு எதிரானவர். சமீபத்தில் கூட ஓகனேக்கல் விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்.

முன்னாள் எம்.எல்.ஏவான வாட்டாள், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில், புட்டரங்க ஷெட்டி, பாஜக சார்பில், மகாதேவ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஷெட்டி வெற்றி பெற்றார். வாட்டாள் நாகராஜ், வெறும் 11, 413 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டைப் பறிகொடுத்து படுதோல்வி அடைந்தார்.

பாட்ஷா நடிகர் தோல்வி:

தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நடிகர்களும் போட்டியிட்டனர். இவர்களில் நடிகர் ஜக்கேஷ் தவிர மற்ற அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பியான அம்பரீஷ், ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் போட்டியிட்டார். காவிரிப் பிரச்சினையின் போது தனது மத்திய அமைச்சர் பதவியை உதறியவர் அம்பரீஷ். ஆனால் காவிரிப் படுகையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த நடிகர் சசிகுமார், காங்கிரஸ் வேட்பாளராக செல்லகரே தொகுதியில் போட்டியிட்டார். அவரும் தோற்றுப் போய் விட்டார்.

காமெடி நடிகை உமாஸ்ரீயும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

இதேபோல நடிகர் சாய்குமார் பாஜக வேட்பாளராக பாகேபள்ளி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். இயக்குநர் - நடிகர் மகேந்தர், கொள்ளேகால் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

காமெடி நடிகரும், ரஜினியைப் போலவே இமிடேட் செய்து நடிப்பவருமான ஜக்கேஷ் மட்டும் இத்தேர்தலில் வெற்றியை சுவைத்துள்ளார். இவர் துருவகரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

9வது முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் தரம்சிங இத்தேர்தலில் வென்றிருந்தால் சாதனை படைத்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியுற்று விட்டார். அதே சமயம், 9வது முறையாக போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார்.

இருப்பினும் கடந்த 8 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட கார்கே இந்த முறை தொகுதி மாறி போட்டியிட்டதால் அவருக்கு சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
******************************

நன்றி: தட்ஸ்டாமில்.காம்

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

dondu(#11168674346665545885) said...

போன சனிக்கிழமையன்று உங்களை பார்த்த போது பிளாக்கரிலிருந்து சில நாட்கள் பிரேக் என்றீர்கள். ஆனால் டிபாசிட் இழந்து தோல்வியைத் தழுவிய வட்டாள நாகராஜ் விஷயம் உங்கள் உறுதியை குலைத்தது குறித்து மகிழ்ச்சி.

நானும் ஆசை தீர அந்தாள் வட்டாளின் தேர்தல் ரிசல்டை பலமுறை பார்த்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வணக்கம் பாலா அவர்களே,

முட்டாள் நாகராஜ் தோல்வி குறித்து மகிழ்ச்சியே ஆனால் அந்த முட்டாள் நம்ம கிட்ட மக்கள் இன்னும் அதிகம் எதிர்பார்கிரங்க அப்படின்னு அதிகம் ஆட்டம் ஆடினா என்ன பண்றதுன்னு நான் நினைக்கிறேன்

சரவணன்

Santhosh said...

பாலா தரம்சிங் தோற்றுவிட்டாரா என்ன? டிவியில் அவர் பத்தாவது முறை ஜெயித்ததாக இல்ல காட்டினாங்க.. இல்ல நான் தப்பா ஏதாவது நினைச்சிகிட்டேனா?

enRenRum-anbudan.BALA said...

டோண்டு சார்,
வருகைக்கு நன்றி.

சரவணன்,
உங்கள் கவலை நியாயமானது தான் :)

சந்தோஷ்,
நெஜமாவே, தரம்சிங் 52 வாக்குகள் வித்தியாசத்தில் தோத்துப் பூட்டாரு !
இந்த செய்திக் கூத்தை வாசிங்க,
http://www.uniindia.com/unilive%5Cunisite.nsf/All/391DB9E38C4515AF65257455004E2C7D

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails